மேலும் செய்திகள்
அ.தி.மு.க., சார்பில் அன்னதானம் வழங்கல்
12-Oct-2025
சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவிலில், டாக்டர் கேசவன் நினைவு நாளையொட்டி, நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது. சிங்கபெருமாள் கோவில், முத்து கணபதி மருத்துவமனை நிறுவனரும், சிங்கபெருமாள் கோவில் முன்னாள் ஊராட்சி தலைவருமான டாக்டர் கேசவனின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள், மருத்துவமனை வளாகத்தில், நேற்று நடந்தது. இதில் டாக்டர் செந்தில், செங்கல்பட்டு அட்வகேட் அசோசியேஷன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பு துணைத் தலைவர் சிவகுமார், டாக்டர்கள் நளினி செந்தில், நித்திஷ் ஆகியோர், அன்னதானத்தை துவக்கி வைத்தனர். இதில், டாக்டர்கள் நளினி சிவக்குமார், வர்ஷினி, ஷாம்சுந்தர், துரைபாண்டியன் குமுதபிரியா, லக் ஷனா, ரோஷினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேலும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.
12-Oct-2025