உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நாவலுார் காப்புக்காடு சாலை புதுப்பிக்க வனத்துறை அனுமதி

நாவலுார் காப்புக்காடு சாலை புதுப்பிக்க வனத்துறை அனுமதி

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த, தத்தலுார் ஊராட்சிப் பகுதியில், நெல்வாய் - திருக்கழுக்குன்றம் சாலையிலிருந்து, நாவலுார் காப்புக்காடு வழியே, தத்தலுார் வரை, ஊராட்சி ஒன்றிய சாலை கடக்கிறது. தத்தலுார் பகுதியினர், அத்யாவசியத் தேவைகள், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வகைக்கு இச்சாலையை கடந்து, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகள் செல்கின்றனர்.காப்புக்காடு பகுதியில் குறுக்கிடும் 1.5 கி.மீ., சாலை மிகவும் சீரழிந்து, இப்பகுதியினர் கடும் அவதிப்படுகின்றனர். திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி நிர்வாகம், சாலையை சீரமைக்க, வனத்துறை அனுமதி பெறுவதில், முறையான நடைமுறையை பின்பற்றாமல், சிக்கல் நீடித்தது. இச்சூழலில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி முயற்சியில் பர்வேஷ் என்ற பிரத்யேக இணையதளத்தில், வனத்துறை அனுமதிக்காக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தார். அதை பரிசீலித்த, தலைமை வன பாதுகாவலர், 1,420 மீ., நீளம், 3.75 மீ., அகலம் சாலை அமைக்க, தற்போது அனுமதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ