உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு கல்லுாரி மாணவியர் விடுதிக்கு அடிக்கல்

அரசு கல்லுாரி மாணவியர் விடுதிக்கு அடிக்கல்

மாமல்லபுரம்;நெம்மேலி அரசு கலை, அறிவியல் கல்லுாரியில் மாணவியர் விடுதி கட்ட, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில், 2011ம் ஆண்டு, சென்னை பல்கலை உறுப்பு கல்லுாரியாக அரசு கலை, அறிவியல் கல்லுாரி துவக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன், அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. மாணவ - மாணவியர் தங்கி படிப்பதற்கு, இங்கு விடுதி வசதியில்லை. இதனால், விடுதி அமைக்க வேண்டுமென மாணவ - மாணவியர் வலியுறுத்தி வந்தனர். இங்கு விடுதி அமைக்க கல்லுாரி நிர்வாகம், அரசிடம் பரிந்துரைத்தது. இதையடுத்து, மாணவியர் விடுதி அமைக்க ஒரு ஏக்கர் நிலமும், மாணவர் விடுதி அமைக்க 50 சென்ட் நிலமும் ஒதுக்கப்பட்டது. முதல்கட்டமாக, 5.45 கோடி ரூபாய் மதிப்பில் மாணவியர் விடுதி கட்ட ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை