கஞ்சா கடத்தி விற்ற நால்வர் கைது
செங்கல்பட்டு, டிச. 22--சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயிலில், செங்கல்பட்டிற்கு சிலர் கஞ்சா கடத்தி வருவதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.செங்கல்பட்டு ரயில் நிலையம் சென்ற போலீசார், பயணியரை சோதனை செய்தனர்.அப்போது, ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்ற பெண்ணை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது. காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர் கல்பாக்கம் பகுதியை சேர்ந்த சந்தியா,30, என தெரிந்தது.திருக்குழுக்குன்றம் ராஜ் என்பவருடன் சேர்ந்து, ஆந்திர மாநிலம் தடாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, வயலுார் கிராமத்தைச் சேர்ந்த தீனா,24, விஷ்வா,24, ஆகியோருடன் சேர்ந்து விற்றது தெரிந்தது.தீனா, விஷ்வா வீடுகளில் சோதனை செய்த போது, 700 கிராம் கஞ்சா சிக்கியது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மேற்கண்ட நால்வரையும் கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.