உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மொபைல்போன் திருட்டு வழக்கில் நால்வர் கைது

மொபைல்போன் திருட்டு வழக்கில் நால்வர் கைது

மறைமலைநகர், மறைமலைநகர் அடுத்த பேரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி, 27, இவர், தன் நண்பர் அர்ஜூன் என்பவருடன் வசித்து வருகிறார்.இருவரும் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர்.நேற்று முன்தினம் இரவு, பாலாஜி வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு துாங்கினார்.மீண்டும் எழுந்து பார்த்தபோது அறையில் இருந்த இரண்டு மொபைல்போன்களை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.இதுகுறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் விசாரித்தனர்.இதில் தொடர்புள்ள வேலுார் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த மகேந்திரன்,27, முருகன், 27, ஆகிய இருவர், திருடிய மொபைல்போன்களை வாங்கிய குடியாத்தம் வீரபத்திரன், 26, அண்ணாமலை, 32, என, நால்வரை கைது செய்து, விசாரணைக்கு பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ