குப்பை, கூளமான அனுமந்தபுரம் நிழற்குடை
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் -அனுமந்தபுரம் தடத்தில் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து இயக்கப்படுகின்றன.இந்த தடத்தில் தென்மேல்பாக்கம், கொண்டமங்கலம், தர்காஸ், அனுமந்தபுரம், வீரபத்திரர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இந்த பேருந்து நிறுத்தங்களை அஞ்சூர், தாசரி குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும் அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள அகோர வீரபத்திரர் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பலர் வந்து செல்கின்றனர்.அனுமந்தபுரம் அரசு தொடக்கப்பள்ளி அருகில் உள்ள பேருந்து நிழற்குடை முழுதும் போஸ்டர் ஒட்டப்பட்டு, குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.இந்த நிழற்குடையை முறையாக பராமரித்து பயணிகள் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.