உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவஸ்தை

தார்ப்பாய் மூடாமல் செல்லும் குப்பை லாரிகளால் அவஸ்தை

மறைமலை நகர்:தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, லாரிகள் வாயிலாக சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொளத்துார் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.இந்த லாரிகள், தாம்பரம் -- ஒரகடம் வழியாகவும், சிங்கபெருமாள் கோவில் வழியாகவும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, லாரிகள் மறைமலை நகர் சாமியார் கேட் வழியாக செல்வதால், பேரமனுார், சட்டமங்கலம், பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த சாலை வழியாக செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடாமல் செல்வதால், குப்பை காற்றில் பறந்து, அச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீதும், குடியிருப்புகள் மீதும் விழுகிறது.தொடந்து லாரிகள் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குடியிருப்புகள் நடுவே கனரக வாகனங்கள் செல்வதால், விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலை வழியாக குப்பை லாரிகள் செல்வதை, மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து, மறைமலை நகர் நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “மறைமலை நகர் சாமியார் கேட் சாலை வழியாக குப்பை லாரிகள் செல்வதை தடை செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் அளித்துள்ளோம்,” என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை