உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மதுராந்தகத்தில் பயன்பாடின்றி வீணாகி வரும் கை பம்ப்

மதுராந்தகத்தில் பயன்பாடின்றி வீணாகி வரும் கை பம்ப்

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது.இதில், 10வது வார்டுக்கு உட்பட்ட ஜி.எஸ்.டி., சாலை மற்றும் போலீஸ் குடியிருப்பில் உள்ள குடியிருப்புவாசிகள் பயன்பெறும் வகையில், குடிநீர் கை 'பம்ப்' அமைக்கப்பட்டது.தற்போது, அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கை பம்ப் பயன்படுத்தப்படாமல் உள்ளது.எனவே, இந்த கை பம்ப்பை அகற்றிவிட்டு, அங்கு மின் மோட்டார் அமைத்து, அருகில் குடிநீர் தொட்டி வைக்க, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை