உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கடும் சேதமான சாலைகள்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

 கடும் சேதமான சாலைகள்: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பம்மல்:தாம்பரம் மாநகராட்சி, பம்மல், பிரசாந்தி காலனி சாலை, திருநீர்மலை - பம்மலை இணைக்கிறது. இச்சாலையில் பலதரப்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. சமீபத்தில் பெய்த மழையில், இச்சாலை சேறும், சகதியுமாக மாறி, மெகா பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சேற்றில் நீந்தி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆய்வு செய்து, இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ