உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 3டி லேசர் திட்டத்தை கைவிட ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

3டி லேசர் திட்டத்தை கைவிட ஹிந்து முன்னணி வலியுறுத்தல்

மாமல்லபுரம் : மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு சிற்ப '3டி லேசர்' ஒளி - ஒலி காட்சி திட்டத்திற்கு, ஸ்தலசயன பெருமாள் கோவில் இடத்தை பயன்படுத்துவதை கைவிடுமாறு, ஹிந்து முன்னணி அமைப்பு வலியுறுத்தி, போஸ்டர் ஒட்டியுள்ளது.மாமல்லபுரத்தில், அர்ஜுனன் தபசு சிற்பம் குறிப்பிடத்தக்கது. இதில், பெரிய பாறைக்குன்றின் விளிம்பில், நிலத்தடியின் கீழ், மேலாக சுவாமியர், தேவர்கள், விலங்குகள், கங்கை நதி உள்ளிட்ட சிற்பங்கள், புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், இச்சிற்பத்திற்கு, '3டி லேசர்' ஒளி - ஒலி காட்சி திட்டத்தை, 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த முடிவெடுத்தது.இத்திட்டத்திற்கு பல சிக்கல்கள் வந்த நிலையில், இரு ஆண்டுகளாக முடங்கியிருந்தது.ஒப்பந்த நிறுவனம் தற்போது, இரும்பு கன்டெய்னர்கள் வைத்தது. பார்வையாளர்கள் நடக்க, கற்களில் நடைபாதை அமைக்கப்படுகிறது. இந்நிலையில், கோவில் இடத்தை கோவில் மேம்பாடு, பக்தர்கள் பயன்பாடு ஆகியவற்றுக்கே பயன்படுத்த வேண்டும்.அங்கு செயல்படுத்தும் '3டி லேசர்' ஒளி - ஒலி காட்சி சுற்றுலா திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, ஹிந்து முன்னணி அமைப்பினர், மாமல்லபுரத்தில் போஸ்டர்கள் ஒட்டி வலியுறுத்தி உள்ளனர்.திட்ட பணிகள் நடந்தால், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும், திட்டத்திற்கு தடை கோரி வழக்கு தொடரப்படும் என்றும் அதில் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ