தாம்பரம்,:தாம்பரம், மூகாம்பிகை நகர், ஒன்றாவது தெருவில், இரவோடு இரவாக போடப்பட்ட சிமென்ட் சாலை பள்ளம் மேடாக உள்ளதால், ஜல்லி பெயர்ந்தும், மழைநீர் தேங்கியும் அலங்கோலமாக உள்ளது.மேற்கு தாம்பரம், மூகாம்பிகை நகர், ஒன்றாவது தெருவில், 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இத்தெருவில், கடந்த 11ம் தேதி, இரவோடு இரவாக சிமென்ட் சாலை போடப்பட்டது.இந்த சாலை, முறையான சமமான அளவில் அமைக்கப்படாததால், பள்ளம் மேடாகவும், ஆங்காங்கே ஜல்லி பெயர்ந்தும், மழைநீர் தேங்கியும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.இது குறித்து, அத் தெருவில் வசிப்போர் கூறியதாவது:ஜூலை 11ம் தேதி இரவு, சிமென்ட் சாலை போடப்பட்டது. பொதுவாக, ஒரு இடத்தில் சாலை அமைத்தால், சமமான அளவில் இருக்கும். மழை பெய்தால் தண்ணீர் தேங்காது. ஆனால், இந்த சாலை பள்ளம் மேடாக அமைக்கப்பட்டு உள்ளது.அதோடு, சாலை போடும் முன், சாலையோர கால்வாயை துார்வார வேண்டும். ஆனால், இத்தெருவில் உள்ள கால்வாய், பல ஆண்டுகளாக துார்வாரப்படவில்லை.Galleryமேலும், சாலை அமைக்கும் போது, இருந்த கால்வாயையும் சேதப்படுத்தி விட்டனர். புதிதாக அமைக்கப்பட்ட சாலை, 10 நாட்களிலேயே ஆங்காங்கே ஜல்லி பெயர்ந்தும், மழைநீர் தேங்கியும் அலங்கோலமாக உள்ளது.ஏதோ பெயருக்காக சாலை அமைத்தது போல் உள்ளது. அதனால், மாநகராட்சி கமிஷனர், தாம்பரம் எல்.எல்.ஏ., பொறியியல் பிரிவு அதிகாரிகள், இச்சாலையை நேரில் ஆய்வு செய்து, முறையாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.