உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சின்னகயப்பாக்கம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சின்னகயப்பாக்கம் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சித்தாமூர்:சேதமடைந்துள்ள சின்னகயப்பாக்கம் சாலையை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சித்தாமூர் அடுத்த சின்னகயப்பாக்கம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அச்சிறுப்பாக்கம் - போந்துார் மாநில நெடுஞ்சாலையில் இருந்து, சின்னகயப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையை, தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன. பராமரிப்பு இல்லாமல், ஜல்லிகள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை