மேலும் செய்திகள்
குட்கா பறிமுதல் ஒருவர் கைது
26-Mar-2025
மதுராந்தகம்,:மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்டு, மதுராந்தகம் காவல் நிலையம் உள்ளது.இந்த காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த முத்துகுமார், கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதனால், மேல்மருவத்துார் காவல் ஆய்வாளர், கூடுதல் பொறுப்பாக மதுராந்தகம் காவல் நிலையத்திலும் பணிபுரிந்தார்.மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு ஆய்வாளரை நியமிக்க, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுதது, காஞ்சிபுரம் டவுன் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் பரந்தாமன், மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.அதன்படி அவர், மதுராந்தகம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
26-Mar-2025