உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சட்ட கல்லுாரியில் சர்வதேச பயிலரங்கம் துவக்கம்

சட்ட கல்லுாரியில் சர்வதேச பயிலரங்கம் துவக்கம்

திருப்போரூர்:திருப்போரூர், புதுப்பாக்கத்திலுள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரியில், மூன்று நாள் சர்வதேச பயிலரங்கம், நேற்று துவங்கியது. திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு, 'சமகால சட்ட சிக்கல்களும் மற்றும் வளர்ந்து வரும் போக்குகளும்' என்ற தலைப்பில், மூன்று நாள் சர்வதேச பயிலரங்கம், நேற்று துவங்கியது. தமிழ்நாடு சட்ட கல்வி இயக்குநர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலேக்சாண்டர் பங்கேற்று பேசினார். பல்வேறு சட்ட கல்லுாரிகளின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த சர்வதேச பயிலரங்கில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சட்ட அறிஞர்கள், வல்லுநர்கள், பேராசிரியர்கள், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்று, பயிற்சி அளிக்க உள்ளனர். தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக்கல்லுாரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாணவ - மாணவியர் பங்கேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ