உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அங்கன்வாடி பணியிடத்திற்கு நேர்காணல்

அங்கன்வாடி பணியிடத்திற்கு நேர்காணல்

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம், நேற்று நேர்காணல் நடந்தது.திருப்போரூர் ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.இதில், பொன்மார் மலைத்தெரு, படூர், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 13 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் நாவலுார், தாழம்பூர், கொளத்துார் ஆகிய பகுதிகளில் 3 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.அந்த பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதற்காக, 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.அவர்களுக்கான நேர்காணல், திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலக கூட்டரங்கில், நேற்றும், நேற்று முன்தினமும் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ