உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்காணல்

அங்கன்வாடி பணியாளர் பணிக்கு நேர்காணல்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், அங்கன்வாடி பணியாளர் பணிக்கான நேர்காணல், நேற்று நடந்தது.அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது.இதில், 8 பணியாளர்கள் உள்ளனர்.அதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு 149 மையங்கள் செயல்பட்டு வருகின்றன.மொத்தமுள்ள 149 மையங்களில், 8 பணியாளர் பதவிகள் மற்றும் 24 அங்கன்வாடி மைய உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.அதற்காக, குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், இப்பணிகளுக்காக விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர்.இதில், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், இப்பணிகளுக்காக விண்ணப்பித்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை