ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் செங்கையில் விசாரணை துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டு கோரி, 4,129 பேர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்களை விசாரணை செய்து, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என, வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த ஆண்டு நவ., 26ம் தேதியிலிருந்து, ஏப்., 15ம் தேதி வரை, புதிய ரேஷன் கார்டு கேட்டு, 4,129க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர்.அதன் பின், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், கடந்த சில நாட்களுக்கு முன், புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களுக்கு புதிய கார்டுகள் வழங்க, மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க, மாவட்ட வழங்கல் அலுவலருக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.அதன் பின், இந்த விண்ணப்பங்களை, வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில், தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்க, மாவட்ட வழங்கல் அலுவலர் உத்தரவிட்ட பிறகு, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். இதுகுறித்து, மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள் கூறியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மனுக்கள் மீது, விசாரணை நடைபெற்று வருகிறது. புதிய ரேஷன் கார்டுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மனுக்கள் மீது விசாரணை முடிந்து, புதிய கார்டுகள் வழங்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
௹சலுகை பெற அவசியம்
ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே ஜாதி சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று மற்றும் அரசு சலுகை பெற முடியும்.மத்திய மற்றும் மாநில அரசுகளின் மருத்துவ காப்பீடு திட்டங்கள், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட சலுகைகளை பெற, ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு, ரேஷன் கார்டு முக்கியம். எனவே, மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தாலுகா புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம்
செங்கல்பட்டு 833மதுராந்தகம் 548செய்யூர் 450திருக்கழுக்குன்றம் 430திருப்போரூர் 648வண்டலுார் 1220மொத்தம் 4129