உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜூலை 6ல் மினிமாரத்தான் பங்கேற்க அழைப்பு

ஜூலை 6ல் மினிமாரத்தான் பங்கேற்க அழைப்பு

செங்கல்பட்டு,சென்னையில் வரும் ஜூலை 6ல் நடைபெறும் மினி மாரத்தான் போட்டியில், செங்கல்பட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.கூட்றவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார் அறிக்கை:சர்வதேச கூட்டுறவு ஆண்டை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில், வரும் ஜூலை 6ம் தேதி காலை 5:30 மணிக்கு, மினி மாரத்தான் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டி, சென்னை தீவுத்திடலில் துவங்கி, சுவாமி விவேகானந்தா சாலை, மன்றோ சிலை வழியாக சென்று, தீவுத்திடலில் வந்தடையும்.இதில், 18 வயது முதல் ஆண், பெண்கள் பங்கேற்கலாம். வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு 30,000 ரூபாய். இரண்டாம் பரிசு 20,000 ரூபாய். மூன்றாம் பரிசு 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.இது தவிர ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக பரிசுகளும் வழங்கப்படும். மேலும் பதக்கம், பாராட்டு சான்றிதழ் டி - சர்ட், சிற்றுண்டி வழங்கப்படும். இதில், பங்கேற்க விரும்புவோர் (http;//www.tncu.in.gov/marathon/register) என்ற இணையதளத்தில் பதிவு செய்து, 100 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு, 9790954671 என்ற மொபைல்போன் எண் மற்றும் gmail/com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை