உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொடர் செயின் பறிப்பு சம்பவம் வடமாநில குற்றவாளிகள் கைவரிசை?

தொடர் செயின் பறிப்பு சம்பவம் வடமாநில குற்றவாளிகள் கைவரிசை?

தாம்பரம்:மறைமலை நகரில், 'பஜாஜ் பல்சர்' பைக்கை திருடிய மர்ம நபர்கள் இருவரால், கடந்த 17ம் தேதி இரவு, எட்டு பேரிடம் அடுத்தடுத்து செயின் பறிக்கப்பட்டது.மறைமலை நகர், ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி, நெல்லிக்குப்பம் கூட்டு சாலை, பீர்க்கன்காரணை, தாம்பரம், சேலையூர், ஆதனுார் ஆகிய இடங்களில், பெண் சப் - இன்ஸ்பெக்டர் உட்பட எட்டு பேரிடம் செயின் பறிக்கப்பட்டுள்ளது. இது, தாம்பரம் போலீஸ் கமிஷனரக மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இச்சம்பவத்தை தொடர்ந்து, ஐந்து தனிப்படைகள் அமைத்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். தொடர் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள், வட மாநில திருடர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதேநேரத்தில், மர்ம நபர்கள், தாம்பரத்தில் வாகனத்தை போட்டுவிட்டு, தயாராக வைத்திருந்த சட்டையை மாற்றிக்கொண்டு, வெவ்வேறு திசையில் தப்பியுள்ளனர்.

இது புதிதல்ல

இதுபோன்று, 2014 முதல் 2016 வரை, புறநகரில் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது. 2017ல், சேலையூரில் வாகன சோதனையின் போது, இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், புறநகர் பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தனிப்படை போலீசார், ராஜஸ்தான் சென்று, அவர்களின் கூட்டாளிகள் மூன்று பேரை கைது செய்தனர்.அதன்பின், மீண்டும் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ளதால், வட மாநில திருடர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. பழைய குற்றவாளிகள், செயின் பறிப்பு திருடர்கள் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை