உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / போதையில் வீட்டில் இறந்த ஐ.டி., ஊழியர்

போதையில் வீட்டில் இறந்த ஐ.டி., ஊழியர்

சேலையூர்:கிழக்கு தாம்பரம், எம்.இ.எஸ்., சாலை, இரண்டாவது குறுக்கு தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்தவர் அருணன், 49; மென்பொறியாளர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த இவர், ஐந்து மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை.மனைவி, மகள் இவரை பிரிந்து வாழ்வதால், அருணனுக்கு குடிப்பழக்கம் அதிகமாகியுள்ளது. நேற்று முன்தினம் காலை, அடுக்குமாடி குடியிருப்பின் 'பார்க்கிங்' பகுதியில் போதையில் கிடந்தவரை, சக குடியிருப்புவாசிகள் எழுப்பி, வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.அன்று இரவு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்து, வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அவர்கள் வந்து பார்த்த போது, அருணன் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.108 ஆம்புலன்ஸை அழைத்து பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரிந்தது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ