மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து திருட்டு
08-Nov-2025
மதுராந்தகம்: படாளம் காவல் எல்லைக்கு உட்பட்ட பிலாப்பூர் கிராமத்தில் நேற்று முன்தினம், இரண்டு வீடுகளின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த நகையை, மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். படாளம் அருகே பிலாப்பூர் கிராமம், இந்திரா காந்தி தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன், 42. இவர், நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் வீட்டில் துாங்கியுள்ளார். அப்போது, நள்ளிரவு நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, அதிலிருந்த 6 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர். இதேபோன்று பிலாப்பூர், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த மோகனதயாளன், 50, என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த நான்கு சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர். நகையை இழந்தோர் இதுகுறித்து நேற்று அதிகாலை, படாளம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்படி அப்பகுதிக்குச் சென்ற படாளம் போலீசார், வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
08-Nov-2025