உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாண வைபத்துடன் நிறைவு

திருப்போரூரில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாண வைபத்துடன் நிறைவு

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் விண்ணிலிருந்து போர்புரிந்த கோவிலாக கந்தசுவாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவத்தின் போது, வள்ளி திருக்கல்யாண உற்சவமும், கந்தசஷ்டி விழா நிறைவில் தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.இந்தாண்டு மகா கந்த சஷ்டி வைபவம், கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் கந்தபெருமான் வள்ளி, தெய்வானையருடன் வீதியுலா வைபவம் காலை, இரவு நேரங்களில் நடந்தது. பிரதான சூரசம்ஹார விழா 7ம் தேதி விமரிசையாக நடந்தது.நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு கந்தபெருமான்- தெய்வானையை மணம் முடிக்கும் திருக்கல்யாணம் உற்சவம் விமரிசையாக நடந்தது. பக்தர்கள் சீர்வரிசைகளுடன் உற்சவர் மண்டபத்தில் குவிந்தனர்.திருக்கல்யாண வைபவத்திற்கு பின், வளையல், பூ பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த திருக்கல்யாண வைபவத்துடன் சஷ்டி விழா நிறைவுபெற்றது.

ஆத்தூர்

செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில் புகழ்பெற்ற தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கந்தஷ்டி விழா நடைபெறும்.இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா, ஆறுமுகசுவாமி கோவிலில் கடந்த 2ம் தேதி துவங்கி, 8ம் தேதி வரை நடைபெற்றது. இதில், முக்கிய விழாவான சூரசம்ஹாரமும் நடைபெற்றது.அதைத் தொடர்ந்து, ஆறுமுக சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு நடந்தது.

இரண்டு ஜோடி தண்டுகள் வழங்கல்

கந்தசுவாமி கோவில் விழாக்களின்போது அலங்கரிக்கப்பட்ட சுவாமியை ஸ்ரீபாதம் தாங்கிகளால் ஆலமர விழுது தண்டுகளில் தூக்கிக் கொண்டு. அதற்கான வாகனத்தில் வைத்து மாட வீதியுலா நடைபெறும். தற்போது, அந்த தண்டுகள் பலமிழந்து வருகிறது. கூடுதல் தண்டும் தேவைப்படுகிறது. இதை தொடர்ந்து, சென்னை அடுத்த கதிர்வேடைச் சேர்ந்த கந்தசுவாமி கோவில் பக்தர் அனந்த ராமணன், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து ஆலமர விழுதால், ஓராண்டு பதப்படுத்தப்பட்டு, 27 அடி நீளமுடைய நான்கு தண்டுகள் தயார் செய்யப்பட்டது. இந்த தண்டுகள் கோவில் செயல் அலுவலர் குமரவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு, 2.80 லட்சம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி