உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா கோலாகலம்

திருப்போரூர் : திருப்போரூரில் பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு, கார்த்திகை மாத கிருத்திகை விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.கார்த்திகை மாத முதல் நாளில் கிருத்திகை வந்ததால், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.முடி காணிக்கை செலுத்தி, சரவணப் பொய்கையில் நீராடி அலகு குத்தி, காவடி எடுத்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கந்தபெருமானை தரிசனம் செய்தனர்.மாலை வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் கந்தபெருமான், மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கிருத்திகை விழாவில், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை, மாட வீதிகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 50க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்து சரிசெய்தல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ