திருப்போரூரில் நாளை கிருத்திகை விழா
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், வைகாசி கிருத்திகை நாளை நடைபெறுகிறது.திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான கந்தசுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் மாதந்தோறும், கிருத்திகை விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த வகையில் நாளை, வைகாசி மாத கிருத்திகை விழா நடைபெறுகிறது.இதையொட்டி, நாளை அதிகாலை 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்படுகிறது. அமாவாசை நாளுடனும் கிருத்திகை வருவதால், சுவாமியை தரிசிக்க ஏராளமானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, இன்று இரவு பரணி உற்சவத்தில், கந்த பெருமான் சிறப்பு அலங்காரத்தில், மயில் வாகனத்தில் மாடவீதி உலா வந்து, பக்தர்ளுக்கு அருள்பாலிக்கிறார்.