உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி கராத்தே பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கூடுவாஞ்சேரி கராத்தே பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரியில், கலை டாங்கு சூடு கொரியன் கராத்தே பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கராத்தே பயின்ற மாணவ - மாணவியர், தேசிய அளவிலான கராத்தே போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கான பாராட்டு விழா, கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கலை டாங் சூடு கொரியன் கராத்தே பயிற்சி பள்ளி நிறுவனர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக நீதியரசர் கோகுல்தாஸ், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், தொழிலதிபர் கலைச்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற 80க்கும் மேற்பட்ட கராத்தே பள்ளி மாணவ - மாணவியருக்கு, சான்றிதழ்கள், கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.இதில், கராத்தே பயிற்சி பள்ளி மாஸ்டர்கள் ஜெயலட்சுமி, சுப்ரமணி, அசோக்குமார், சரண்யா மற்றும் கராத்தே பயிற்சி பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி