உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நால்வர் கோவில் கும்பாபிஷேகம் பிப்., 22ம் தேதி நடத்த ஏற்பாடு

நால்வர் கோவில் கும்பாபிஷேகம் பிப்., 22ம் தேதி நடத்த ஏற்பாடு

திருக்கழுக்குன்றம், : சைவ சமய குரவர்களான அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும், வெவ்வேறு காலத்தில் பிறந்து, சைவ சமயம், தமிழ் மொழி வளர்த்து, சிவபெருமானை போற்றிப் பாடியுள்ளனர். திருக்கழுக்குன்றத்தில், வேதங்கள் மலைக்குன்றுகளாக உருவெடுத்து, சிவபெருமான் வேதகிரீஸ்வரராக வீற்று அருள்பாலிக்கிறார்.வேதங்களே குன்றாக அமைந்துள்ளது கருதி, நால்வரும் குன்றில் ஏறாமல் தவிர்த்து, கோவிலின் கிழக்கில் கிரிவல பாதையில் நின்று, சுவாமியை நோக்கியவாறு பாடியதாக நம்பிக்கை.அப்பகுதி, நால்வர்கோவில்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் வீற்றுள்ள பிரத்யேக கோவிலும் அப்பகுதியில் உள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறையின் வேதகிரீஸ்வரர் கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில், இக்கோவில் உள்ளது. பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நிலையில், தற்போது உபயதாரர் சார்பில், 5.20 லட்சம் ரூபாய் மதிப்பில், சன்னிதி புனரமைப்பு உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதன் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்க இருப்பதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி