மேலும் செய்திகள்
அரசு பஸ் மோதி இளைஞர் பலி
19-May-2025
சூணாம்பேடு:பள்ளம்பாக்கத்தில், ஸ்கூட்டரில் சென்ற கூலித்தொழிலாளி மீது டிப்பர் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சூணாம்பேடு அடுத்த பள்ளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தினகரன், 45; கூலித்தொழிலாளி.நேற்று மாலை 3:00 மணியளவில், தன் 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில், வீட்டில் இருந்து வெண்ணாங்குப்பட்டு நோக்கிச் சென்றார்.பள்ளம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே வந்த டிப்பர் லாரி, இவரது ஸ்கூட்டர் மீது நேருக்குநேர் மோதியது.இதில் பலத்த காயமடைந்த தினகரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த சூணாம்பேடு போலீசார், தினகரன் உடலைக் கைப்பற்றி, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.
19-May-2025