உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டுமனை பட்டா கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வீட்டுமனை பட்டா கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா கோரி, சலவை தொழிலாளர்கள் இன்று (அக்.,26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. அப்போது, அங்கு மனு அளிக்க வந்த மகாத்மா காந்தி சலவையாளர்கள் நலச்சங்கத்தினர் இலவச வீட்டுமனை பட்டா கோரி அதிகாரிகள் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு வந்த வருவாய் துறை மற்றும் போலீசார் அவர்களிடம் சமாதான பே ச்சு நடத்தினர். அதன்பின் சலவை தொழிலாளர்கள் செ ங்கல்பட்டு கலெக்டர் வீரப்பனிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: செய்யூர் வட்டம், ஒத்திவிளாகம் கிராமத்தில், 108 சலவை தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க ஊராட்சி நிர்வாகம் சார்பில், 2025ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுதொடர்பான அறிக்கையும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை வீட்டுமனை பிரித்து வழங்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !