நிக் ஷா திட்டத்தில் நிலம் அளவீடு துவக்கம்
மறைமலைநகர், மத்திய அரசின் நில அளவை துறையின் சார்பில், 'நிக் ஷா' என்ற திட்டத்தின் வாயிலாக, நகர்ப்புறங்களில் உள்ள வீடு, காலிமனை, கட்டடங்களின் உயரம் உள்ளிட்டவை அளவீடு மற்றும் 'ட்ரோன்' கேமரா வாயிலாக படமெடுத்து ஒன்றிணைத்து இணையத்தில் வெளிப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஏற்கனவே ஆந்திரா, ஒடிசா, ராஜஸ்தான் மாநிலங்களில் இந்த பணிகள் துவங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 10 நகராட்சிகள் மற்றும் முக்கிய மாநகராட்சிகளில், புவியியல் முறையிலான 'டிஜிட்டல்' பதிவு பணிகள் துவங்கப்பட்டு உள்ளன.மறைமலைநகர் நகராட்சி மைதானத்தில் இதற்கான துவக்க விழா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று காலை நடந்தது.'ட்ரோன் கேமரா'வை இயக்கி, கலெக்டர் இத்திட்டத்தை துவங்கினார்.