மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு
23-Oct-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், காவல் துறை கண்காணிப்பாளரைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழ க்கறிஞர்கள் சங்க உறுப்பினர் சசிகுமார் கைது நடவடிக்கையில் அதிகார துஷ்பிரயோகம் செய்து, நீதிமன்ற மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்திய செங்கல்பட்டு காவல் துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷை கண்டித்தும், அவரை நிரந்தர பணி நீக்கம் செய்யக் கோரியும், செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நுழைவாயில் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தலைவர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் மட்டுமின்றி, மாவட்டம் முழுதும் இருந்து வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
23-Oct-2025