| ADDED : நவ 19, 2025 04:58 AM
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் அருகே மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரண், 20. இவர் அதே பகுதியை சேர்ந்த மதுமிதா, 19 என்ற பெண்ணை காதலித்து, கடந்த நான்கு மாதங் களுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மதுமிதா, அடிக்கடி ஆண் நண்பருடன் மொபைல் போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை சரண் பலமுறை கண்டித்து உள்ளார். ஆனால், மதுமிதா பேசுவதை நிறுத்தாததால், ஆத்திரம் அடைந்த, சரண், மனைவி மதுமிதாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். நேற்று முன்தினம், மாலை அச்சிறுபாக்கம் அடுத்த ஒரத்தி -- திண்டிவனம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள சென்னேரி பகுதியில் உள்ள மலைப்பகுதிக்கு, கோயிலுக்கு செல்லலாம் என மனைவியை அழைத்துச் சென்றுள்ளார் பின், தான் மறைத்து வை த்திருந்த கத்தியை எடுத்து, மதுமிதாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டி விட்டு அங்கிருந்து தலை மறைவாகியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதியில் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள், வந்து பார்த்தபோது பெண் இறந்த நிலை யில் கிடந்துள்ளார். இது குறித்து ஒரத்தி போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அப்பகுதிக்குச் சென்ற போலீசார், மதுமிதா உடலை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த சரணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.