உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பராமரிப்பு இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

பராமரிப்பு இல்லாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு சப் - கலெக்டர் வளாகத்தில், சப் - கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்படுகின்றன.இந்த அலுவலகங்களுக்கு பட்டா மாற்றம், ஜாதி சான்றிதழ்கள், விதை சான்று, நிலம் தொடர்பான பிரச்னை உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக, தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.இந்த வளாக்தில், கலெக்டர் அலுவலகம் இருந்த போது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பாலாற்று நீர் இணைப்பு பெற்று, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டது.நல்ல முறையில் இயங்கியது. கடந்த சில மாதங்களாக, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக பராமரிக்காததால் மூடப்பட்டு உள்ளது.இதனால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். தற்போது, கோடைக்காலம் துவங்கி உள்ளதால் பொதுமக்களுக்கு குடிநீர் தேவை ஏற்படுகிறது.எனவே, பொதுமக்கள் நலன் கருதி, குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரித்து, தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை