உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை நெடுஞ்சாலை அலுவலகம் முட்புதர் சூழ்ந்து சீரழியும் அவலம்

மாமல்லை நெடுஞ்சாலை அலுவலகம் முட்புதர் சூழ்ந்து சீரழியும் அவலம்

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறையின் விருந்தினர் இல்ல வளாகம் உள்ளது. மாமல்லபுரத்திற்கு வரும் அத்துறை அதிகாரிகள், பொறியாளர்கள், அங்கு தங்கி ஓய்வெடுப்பர்.இவ்வளாகத்தில், 25 ஆண்டுகளுக்கு முன், அலுவலக நிர்வாகத்திற்காக, தனி கட்டடம் கட்டப்பட்டது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில், கடந்த 2001ல், கிழக்கு கடற்கரை சாலை மேம்படுத்தப்பட்டது.அத்துறை பொறியாளர்கள் உள்ளிட்டோர், சாலை பணிகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்ய, இங்கிருந்தே பணிபுரியும் வகையில், அலுவலக கட்டடம் நிறுவனத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.நிறுவனத்தினர் இரண்டு ஆண்டுகள் பயன்படுத்தி, சாலை மேம்பாட்டு பணிகள் முடிந்தபின், நெடுஞ்சாலைத்துறையிடம் கட்டடத்தை ஒப்படைத்தனர்.கடந்த 20 ஆண்டுகளாக, இக்கட்டடம் பயன்படுத்தப்படாமல் சீரழிகிறது. கட்டடத்தை கருவேல முட்புதர் சூழ்ந்து, வனமாக அடர்ந்துள்ளது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் பெருகி, அவற்றின் புகலிடமாக மாறியுள்ளது. இவ்வளாகம் அருகில், வீடுகள், விடுதி ஆகியவை உள்ள நிலையில், இங்கிருந்து பாம்புகள் படையெடுப்பதால், அப்பகுதிவாசிகள் அச்சமடைகின்றனர். நெடுஞ்சாலைத் துறையினர் முட்புதரை அகற்றி, கட்டடத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ