உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்த நபர் கைது

மறைமலை நகர்:ராமநாதபுரம் மாவட்டம், காவனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பாலரிகேஷ், 25. செங்கல்பட்டு தசராவில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பகல், அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்த ஜாய்சன், 20, என்பவர், பாலரிகேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்துச் சென்றார்.இது குறித்து, பாலரிகேஷ் நேற்று செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார், ஜாய்சனை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ