மேலும் செய்திகள்
மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு 'போக்சோ'
20-May-2025
திருப்போரூர்:திருப்போரூர் அருகே வசிக்கும் சிறுமி அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் அப்பகுதி அருகே சாலையில் நடந்து சென்றபோது எதிரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த வாலிபர் ஒருவர் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு பைக்கில் தப்பினார். அதிர்ச்சி அடைந்த மாணவி வீட்டிற்கு திரும்பிச் சென்று பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் திருப்போரூர் போலீசில் புகார் செய்தனர்.இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருப்போரூர் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
20-May-2025