மேலும் செய்திகள்
கஞ்சாவுடன் 3 பேர் கைது
16-Oct-2025
நீலாங்கரை: முன் விரோதத்தில், துாங்கிக்கொண்டிருந்த பெண்ணின் மீது கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் முனியம்மா, 50. நீலாங்கரை பாண்டியன் நகரில் தங்கி, வெட்டுவாங்கேணியில் உள்ள ஒரு நிறுவனத்தில், காவலாளியாக பணிபுரிகிறார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும், மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது இஸ்தகின், 25, என்பவர், கட்டுமான வேலை செய்து வந்தார். இவர், ஒரு மாதத்துக்கு முன், போதையில் முனியம்மாவிடம் தகராறு செய்ததால், அவரை கன்னத்தில் அறைந்துள்ளார். அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், எப்படியாவது முனியம்மாவை பழி வாங்க வேண்டும் என, முகமது இஸ்தகின் காத்திருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு, திறந்திருந்த வீட்டுக்குள் புகுந்த முகமது இஸ்தகின், கொண்டு சென்ற சிமென்ட் கல்லை, துாங்கிக் கொண்டிருந்த முனியம்மா தலையில் போட்டு விட்டு தப்பினார். பலத்த காயத்துடன் அலறிய முனியம்மாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு 20 தையல்கள் போடப்பட்டன. நீலாங்கரை போலீசார், முகமது இஸ்தகினை கைது செய்து விசாரிக்கின்றனர்.
16-Oct-2025