பொது மாடியிலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பலி
செங்கல்பட்டு, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார், 27.செங்கல்பட்டு அடுத்த மலையம்பாக்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், உடன் வேலை பார்த்து வந்த நண்பர்களுடன் இணைந்து, அதே அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் செய்து, மது அருந்தி உள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக, இரண்டாவது மாடியில் இருந்து மோகன்குமார் தலைகீழாக தவறி விழுந்தார்.அங்கிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.