உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புலிப்பாக்கத்தில் லாரி மோதி பஸ்சுக்கு காத்திருந்தவர் பலி

புலிப்பாக்கத்தில் லாரி மோதி பஸ்சுக்கு காத்திருந்தவர் பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 65; சமையல்காரர்.இவர், நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக, புலிப்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம் மார்க்கத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.அப்போது, மதுராந்தகத்தில் இருந்து சென்னை நோக்கி, சிமென்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த குமார் மீது மோதியது.அத்துடன் நிற்காமல், முன்னால் தாம்பரம் நோக்கிச் சென்ற மாநகர பேருந்தின் பின்புறம் மோதி நின்றது.இதில், குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மாநகர பேருந்தில் பயணம் செய்த நடத்துநர் உட்பட எட்டு பேருக்கு காயம் ஏற்பட்டது.அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், குமார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை