உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளிகள் இறங்க மெரினா நீச்சல் குளத்தில் வசதி

மாற்றுத்திறனாளிகள் இறங்க மெரினா நீச்சல் குளத்தில் வசதி

சென்னை:மெரினா நீச்சல் குளத்தில், மாற்றுத்திறனாளிகள் இறங்குவதற்கான வசதி செய்யப்பட்டு உள்ளது. சென்னை, மெரினா கடற்கரை, அணுகு சாலையில் உள்ள நீச்சல் குளத்தை, சென்னை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த நீச்சல் குளத்தில் மாற்றுத்திறனாளிகள் இறங்குவதற்கென வசதி இல்லாததால், அவர்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், 15 லட்சம் ரூபாய் செலவில், 'லிப்ட்' போன்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள இருக்கையில் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்ததும், குளத்தில் இறக்கி விடும் வகையில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாகளிகள் குளிப்பதற்கும், உடை மாற்றுவதற்கும் தனியே அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்., 1ம் தேதி முதல், மாற்றுத்திறனாளிகள் குளத்தில் இறங்கி குளிப்பதற்கான வசதிகள் துவங்கப்படும் என, செயற்பொறியாளர் முத்தையா தெரிவித்தார். ரூ.41 லட்சத்தில் கூரை சென்னை மெரினா கடற்கரையில் நுாலகத்திற்கு அருகே, குழந்தைகள் விளையாட்டு பகுதி உள்ளது. வெயில் காலங்களில் விளையாட்டு பகுதியை குழந்தைகளால் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, 41.61 லட்சம் ரூபாய் மதிப்பில் மாநகராட்சி நுாலகம் அருகே உள்ள குழந்தைகள் விளையாட்டு பகுதியில், 'டென்சில் ரூப்' என்ற நிழற்கூரை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ