மேலும் செய்திகள்
நா.த.க.,வினர் சார்பில்தண்ணீர் பந்தல் திறப்பு
02-Apr-2025
தண்ணீர் பந்தல் திறப்பு
22-Mar-2025
திருப்போரூர்:கோடைக்காலம் துவங்கிய நிலையில், சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பல்வேறு அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில், திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேம்படி விநாயகர் கோவில் அருகே, ம.தி.மு.க., செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.இதில், ம.தி.மு.க., செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் லோகு தலைமை தாங்கி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து வெள்ளரிப்பழம், தர்பூசணி, இளநீர், நுங்கு, குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப்போரூர் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சசிகலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அதேபோல் தண்டலம் பேருந்து நிறுத்தம் அருகே, ம.தி.மு.க., நிர்வாகி துரை தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
02-Apr-2025
22-Mar-2025