உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் ம.தி.மு.க., செயற்குழு கூட்டம்

திருப்போரூரில் ம.தி.மு.க., செயற்குழு கூட்டம்

திருப்போரூர்:திருப்போரூரில், ம.தி.மு.க., மாவட்ட செயற்குழு கூட்டம், நடந்தது.ம.தி.மு.க., செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், திருப்போரூரில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்ட செயலர் லோகநாதன் தலைமை வகித்தார்.மாவட்ட அவைத் தலைவர் கெங்காதுறை, திருப்போரூர் பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் சசிகலா உட்பட, 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லுதல், செப்., 15ல் திருச்சியில் மாநாடு நடத்துதல், அதிக உறுப்பினர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளும், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை