எல்.எண்டத்துாரில் மருத்துவ முகாம்
மதுராந்தகம்:எல்.எண்டத்துாரில், தனியார் மருத்துவமனை மற்றும் தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலமாக இலவச மருத்துவ முகாம் நடந்தது.இந்த முகாமில், பொதுநல மருத்துவம், கண், மூக்கு, காது, குழந்தைகள் நல மருத்துவம் மற்றும் எலும்பு, தோல் மருத்துவம் போன்றவற்றின் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.செம்பூண்டி, கிளியாநகர் கிராமங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்.