உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / துாய்மை காவலர்களுக்கு மருத்துவ முகாம்

துாய்மை காவலர்களுக்கு மருத்துவ முகாம்

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், துாய்மை பாரத இயக்கம்மற்றும் மக்கள் நல்வாழ்வு சுகாதாரத் துறை இணைந்து, துாய்மை சேவை இயக்கம் -2024ன் கீழ், துாய்மை காவலர்களுக்கு நேற்று மருத்துவ முகாம் நடந்தது.அச்சிறுபாக்கம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள்மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும், துாய்மையே சேவை உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர்.பின், வட்டார மருத்துவமனை குழுவினரிடம், 250க்கும் மேற்பட்ட துாய்மை காவலர்கள், சுகாதார ஊக்குனர்கள் பல்வேறு உடல் பரிசோதனைகளை செய்து கொண்டனர்.இம்முகாமில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ஞானபிரகாசம் மற்றும் மக்கள் பிரதிநிகள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை