செய்யூரில் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்
செய்யூர்:செய்யூரில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட வணிகர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார். ஆக., 30ம் தேதி திருச்சியில் நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்தார். துாய்மைப்பணியாளர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார். கூட்டத்தில் 400க்கும் மேற்பட்ட வணிகர்கள் பங்கேற்றனர்.