உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஞாயிறு அட்டவணையில் மெட்ரோ ரயில் இயக்கம்

ஞாயிறு அட்டவணையில் மெட்ரோ ரயில் இயக்கம்

சென்னை, பொங்கல் பண்டிகை, இன்று முதல் 16ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில், ஞாயிறு அட்டவணைப்படி, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.அதாவது, காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை 10 நிமிட இடைவெளியில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.மதியம் 12:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஏழு நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும், ரயில்கள் இயக்கப்படும்.

சனிக்கிழமை அட்டவணை

வரும் 17ம் தேதி, சனிக்கிழமை அட்டவணைப்படி, அதாவது, காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஆறு நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.காலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை; காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை; இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10:00 மணி முதல் 11:00 மணி வரை, 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். பயணியர் தேவை அடிப்படையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை