மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிேஷகம்: பக்தர்கள் பரவசம்
05-Sep-2025
திருப்போரூர்:மருத்துவச்சி குஞ்சம்மாளின் ஜீவசமாதி தினத்தையொட்டி, அவரது சிலைக்கு புஷ்ப அபிஷேகம், பூஜை நடந்தது. திருப்போரூர் அடுத்த தாழம்பூரில் ஸ்ரீ திரிசக்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அறங்காவலர் டாக்டர் கே.கே.கிருஷ்ணன்குட்டியின் தாயார் மருத்துவச்சி குஞ்சம்மாளின் சிலை கோவில் வளாகத்தில் உள்ளது. குஞ்சம்மாளின் 31ம் ஆண்டு ஜீவசமாதி தினத்தையொட்டி நேற்று, அவர் சிலைக்கு பல்வேறு பூக்களால் புஷ்ப அபிஷேகம், விசேஷ பூஜை நடந்தது. கோவில் நிர்வாகி விஜயலட்சுமி உட்பட சுற்றுபுற மக்கள் வந்து வழிபாடு செய்தனர். அதேபோல், கேரள மாநிலம், பாலக்காடு முண்டூர் கணக்கு பரம்பில் உள்ள மருத்துவச்சி குஞ்சம்மாள் ஜீவசமாதியில், டாக்டர் கே.கே.கிருஷ்ணன்குட்டி, மனைவி ஓமணா மற்றும் குடும்பத்தினர் சிறப்பு அபிஷேகம், பூஜை செய்தனர். ஏழை - எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
05-Sep-2025