உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லையில் மார்கழி வழிபாடு

மாமல்லையில் மார்கழி வழிபாடு

மாமல்லபுரம், மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நேற்று மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு, காலை 4:15 மணிக்கு, நடை திறந்து, பெருமாளிற்கு பள்ளியெழுச்சி சேவையாற்றினர். சுவாமி, நிலமங்கை தாயார், ஆண்டாள் ஆகியோருக்கு திருப்பாவை பாசுரங்கள் பாடி, சாற்றுமறை சேவையும் செய்யப்பட்டது. மல்லிகேஸ்வரர் கோவிலில், திருவெம்பாவை பாடி, வழிபாடு நடந்தது.நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தி, பக்த பஜனை குழுவினர், தீபத்துடன், திருப்பாவை பாடி, வீதியுலா சென்று, சுவாமிக்கு சாற்றுமறை சேவையாற்றினர்.திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், ஆதிவராக பெருமாளிற்கு, பள்ளியெழுச்சி மற்றும் திருப்பாவை சேவையாற்றினர். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், தனுர் மாதத்தை முன்னிட்டு, முதல்கால பூஜைக்கு முன்னதாக, தனுர் மாத பூஜை வழிபாடு துவக்கப்பட்டது. மார்கழி முழுதும் தினசரி அவ்வாறே நடைபெறும். கல்பாக்கம், ஏகாம்பரேஸ்வரர், சதுரங்கப்பட்டினம், திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்ட பெருமாள், கூவத்துார், திருவாலீஸ்வரர், ஆதிகேசவ பெருமாள் ஆகிய கோவில்களில், திருப்பாவை சேவையாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி