ஏலச்சீட்டில் மோசடி தாய், மகன் கைது
குன்றத்துார்:குன்றத்துார், மேத்தா நகரைச் சேர்ந்தவர் புனிதா, 43. இவரும், இவரது மகனும் நடத்திய மாதச்சீட்டில், அப்பகுதியினர் ஏராளமானோர் சேர்ந்தனர்.இதில் சாந்தி, 54, என்பவர், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பு சீட்டில், தவணை முறையில் மாதம் 20,000 ரூபாயை, 35 மாதங்கள் செலுத்தி வந்துள்ளார்.இந்நிலையில், சீட்டுப்பணம் 7 லட்சம் ரூபாய் தராமல், புனிதாக ஏமாற்றி மோசடி செய்ததாக, குன்றத்துார் காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார்.போலீசார் விசாரணையில், புனிதா பணம் மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து புனிதா, அவரது மகன் போபின், 21, ஆகிய இருவரையும், குன்றத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.