உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரும்பு தடுப்பில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை

இரும்பு தடுப்பில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்ட வாகன ஓட்டிகள் கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த எடையாளம் ஆற்றுப்பாலம் பகுதியில், இரும்பு தடுப்பு கம்பிகளை மறைத்து வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, இரவில் ஒளிரும்,'ஸ்டிக்கர்'கள் ஒட்ட வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அச்சிறுபாக்கம் அடுத்த தொழுப்பேடில் இருந்து ஒரத்தி வழியாக, வந்தவாசி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இங்கு தொழுப்பேடு- ஒரத்தி செல்லும் சாலையில், எடையாளம் ஆற்றுப்பாலத்தின் மீது, இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக, இரும்பு தடுப்பு வேலிகளை மறைத்து, சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இவற்றை அகற்றி, இரும்பு தடுப்புகளில் இரவில் ஒளிரும்,'ஸ்டிக்கர்'கள் ஒட்ட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ