உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரம்: சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால், வாகன ஓட் டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். வாலாஜாபாத் - வண்டலுார் வரை, 47 கி.மீ., நான்குவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், 175.69 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி, 2019ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இங்கு சாலை மைய தடுப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிரதான கடவுப்பாதைகளில் எச்சரிக்கை தடுப்பு சாதனங்கள் இல்லை. நத்தாநல்லுார், தேவரியம்பாக்கம், அளவூர், வாரணவாசி ஆகிய பகுதிகளில், சாலையின் ஒரு புறத்தில் இருந்து, மற்றொரு புறத்திற்கு கடந்து செல்வதற்கு முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுதவிர, சேர்காடு, ஊத்துக்காடு, நத்தாநல்லுார் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் சாலை நடுவே மாடுகள் படுத்து ஓய்வு எடுக்கின்றன. தற்போது, பகல் நேரத்திலும் ஓய்வு எடுக்க துவங்கியுள்ளன . இதனால், வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், மாடுகளால் விபத்தில் சிக்கி வருகி ன்றனர். எனவே, வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில், சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை